Font size: 15px12px
Print
மலேசியாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பார்னேவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக, குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள ஏற்பட்டுள்ளன. நேற்று வரையில் இந்த கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இயற்கை எரிவாயு மையம் அமைந்திருக்கும் சாபா மற்றும் சரவாக் பகுதிகளில் மட்டும் 700 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக அரசு கொடுத்த தரவுகளில் தெரிய வந்துள்ளது. அதேபோல, அண்மையில் பின்டுலுவில் 48 மணிநேரத்தில் 800 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.மேலும், இன்று வரையில் இந்த கனமழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Posts