சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், கடந்த 29-ந்தேதி கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெறிக்கல்மேடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், ரத்தினசாமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கலவரத்தை தூண்டுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Posts