Font size: 15px12px
Print
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமைறைவாக உள்ளார். அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக பேசி வருகிறார்.எனினும் , கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்த நிலையில், வழக்கு ஒன்றில் நித்யானந்தா குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், நித்யானந்தா எங்கு உள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளது. நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார் என தமிழக அரசு கூறியுள்ளது.
Related Posts