இன்ஸ்டா வந்ததும் நிறைய பிரபலங்கள் பல டிரண்ட் உருவாக்கினார்கள். அப்படி 4 மணி ஆனால் புத்தம் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ரசிகர்களால் பேசப்படும் நாயகியாக வலம் வந்தவர் ஷிவானி நாராயணன். நாலு மணி ஆனாலே போதும் இன்ஸ்ட்டா பக்கம் வந்து அட்டனன்ஸ் போட்டு விடுகிறார்கள் இவரது ரசிகர்கள். சீரியல் நடிகையான இவர் பிக்பாஸ் பக்கம் வந்து அந்த நிகழ்ச்சி மூலமாகவும் பெரிய அளவில் பிரபலம் ஆனார். பிக்பாஸ் பிறகு படங்கள் கமிட்டாகி நடிப்பார் என்று பார்த்தால் அவ்வளவாக ஆளையே காணவில்லை. இந்த நிலையில் போட்டோக்களுக்கு பெயர் போன ஷிவானி லேட்டஸ்ட்டாக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நாம் பார்த்த ஷிவானியா இது? முகத்தை என்ன செய்தார்? ஆளே வேறொருவர் போல் காணப்படுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். உண்மையில் இந்த மாற்றமடைந்த முகத்தை பார்க்கும்போது, பழைய ஷிவானி போலவே இல்லை. பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்?