தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார். இவர் நடிப்பில் இரண்டு வருட நீண்ட காத்திருப்புக்குப் பின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது.இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் ஆவலோடு சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே எழுந்து வருகிறது. என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் பிடித்தால் தான் பாராட்டுவோம் என்பது தமிழ் ரசிகர்களின் வழக்கம். இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தியேட்டரில் விடாமுயற்சி படத்தை பார்த்து விட்டு வந்துள்ளார். அங்கு வந்தவருக்கு ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடைபெற்றுள்ளது. படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வெளியே வந்த அனிருத்தை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.அனிருத் வந்த கார் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்ததால் ரூ.1000 அபதாரம் செலுத்த வேண்டும் என்று போலீசார் கூறியதால் மிகவும் அப்செட் ஆன அனிருத் பணத்தைக் கட்டிவிட்டு காரில் அங்கிருந்து சென்றுள்ளார்.