நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.அதன் பின் நாக சைதன்யா கடந்த வருடம் தனது புது காதலி சோபிதாவை திருமணம் செய்துகொண்டார். மறுபுறம் சமந்தா சிங்கிளாக தான் இருக்கிறார். அவர் மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பில் இருந்து மீள சிகிச்சையை தொடர்ந்து வருகிறார். நாக சைதன்யா அடுத்த திருமணம் செய்துகொண்டது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சமந்தாவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதை பார்த்து பொறாமையாக இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார்கள். அய்யய்யோ இல்லை. நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமை தான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். ஒரு பெண் திருமணமாகி குழந்தைகள் பெற்று இருந்தால் தான் முழுமையானதாக சமூகத்தில் பார்கிறார்கள். என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவிலை என்றால் நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள்.ஒரு பெண் என்பவருக்கு விதிக்கப்படும் தரநிலைகளை அவள் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் அவள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கிறாள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும், இவ்வாறு தன் மீது வரும் விமர்சனங்களுக்கு சமந்தா பதிலடி கொடுத்து இருக்கிறார்.