Update: நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபரை கைது செய்ய தீவிரம்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக நபரான கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ அறிக்கையை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி போன்று வேடமணிந்து வந்த சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் அரச ஆரம்ப கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (P)

Related Posts