Font size: 15px12px
Print
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதற்கட்ட பரிசோதனைகளில் அவருக்கு சுவாசக்குழாய் தொற்று மற்றும் லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போப்புக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுவதால், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Posts