சூடானில் டிரோன் தாக்குதல் - 30 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடந்த கொடூர டிரோன் தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டார்ஃபூர் மாகாணம் பகுதியில் உள்ள குடும் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சூடானில் 2023 ஏப்ரல் மாதம் முதல் ராணுவத்திற்கும், அதிவிரைவு ஆதரவு படையினருக்கும் இடையே கடும் உள்நாட்டு மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை  40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதல் மனிதாபிமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு சூடான் ராணுவமே காரணமாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related Posts