ஜன நாயகன் முழு படமும் இணையத்தில்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தேர்தல் சூழ்நிலை காரணமாக தாமதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் மற்றும் இறுதி பகுதிகள் இணையத்தில் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து, தற்போது முழு 3 மணி நேர திரைப்படமும் சட்டவிரோதமாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் முழு படம் வெளியானது குறித்து யார் இதை வெளியிட்டனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையில் இது போன்ற சட்டவிரோத கசிவுகள் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Posts