வினோத நோயால் சிரமத்திற்கு உள்ளான நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் லைலா. இந்தியில் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பின் மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 2006 - ம் ஆண்டு முதல் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் செட்டிலான நடிகை லைலா, கடந்த 2022ல் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். சமீபத்தில் விஜய்யின் goat திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், சிரிப்பு நோயால் அவதிப்படுவதாக லைலா கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில் நான் சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் சிரிப்பதை நிறுத்தவே முடியாது. அப்படி நிறுத்த முயன்றால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும். பிதாமகன் படப்பிடிப்பின்போது ஒரு நிமிடம் சிரிக்காமல் இருக்குமாறு விக்ரம் என்னிடம் சவால் விடுத்தார். ஆனால் என்னால் 30 வினாடிகள் கூட நிறுத்த முடியவில்லை. இதன் மூலம் வந்த கண்ணீர் என் மேக்கப்பை முற்றிலும் கெடுத்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

Related Posts