சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் பேட்டிகளில் எதாவது ஒரு விஷயம் தவறாக பேசிவிட்டால் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும். அதுவும் பாலிவுட் நடிகர்கள் என்றால் எப்போதும் ஏதாவது பேசி சர்ச்சையில் மாட்டிக்கொள்வாரகள். அந்த லிஸ்டில் தற்போது வந்திருப்பது ஹிந்தி நடிகை பரினீதி சோபர். நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான அவர் ஹிந்தியில் பாப்புலர் நடிகையாக இருக்கிறார்.நடிகை பரினீதி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது கட்டிட வேலை செய்வதை கேவலம் என்பது போல பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தொகுப்பாளர் கேள்வி கேட்கும்போது, நான் அமெரிக்காவில் கட்டிட வேலை செய்திருக்கிறேன். நீங்கள் அப்படி எதாவது வேலை செய்திருக்கிறீர்களா? என கேள்வி கேட்டார்.அதற்க்கு பரினீதி என்னுடையது அவ்வளவு embarrassing ஆக எல்லாம் இருக்காது என பேசி இருக்கிறார். கட்டிட வேலை செய்வது என்ன கேவலமா என நெட்டிசன்கள் தற்போது நடிகையை விளாசி வருகின்றனர். தனக்கு கிடைத்த ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் ஒரே பேட்டியில் சரித்துக்கொண்டார்.