லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடா பிரதமராகவும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க் கார்னி, நம்முடைய நாட்டின் நீர், நிலம், வளங்கள் ஆகியவற்றை அமெரிக்கா விரும்புகிறது. ட்ரம்ப் நமது கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள், வணிகங்களைத் தாக்குகிறார். இதில், அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. இந்தத் தருணத்தில், கனேடியர்களுக்குத் தேவைப்படுவது கனடாவுக்காக நிற்பதுதான். சிறந்த தேசத்தை உருவாக்கப் போராடத் தயாராக இருக்கிறேன். கனடா ஒன்றும் அமெரிக்கா அல்ல. ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் கனடா இருக்காது. நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று எனக்குத் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், நெருக்கடி மேலாண்மையில் உங்களுக்கு அனுபவமும், பேச்சுவார்த்தை திறனும் தேவை என்று கூறினார்.