ரொறன்ரோவில் நகரில், கொலை சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்க்கம் நகரைச் சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி மற்றும் நார்த் யார்க் நகரைச் சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர் ஆகியோர் மார்ச் 8 அன்று கைது செய்யப்பட்டனர். பிக்கரிங் நகரில் அமைந்துள்ள மான்ஷன் கிச்சன் அண்ட் பாரில் கொலை சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. டொரோண்டோ காவல்துறையினர் இவர்களை கைது செய்து, ஒவ்வொருவருக்கும் முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த கைதுகள், ஸ்கார்பரோவில் உள்ள பைபர் ஆர்ம்ஸ் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாளில் நடைபெற்றன. எனினும், காவல்துறை பேச்சாளர், இந்த இருவருக்கும் ஸ்கார்பரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.