ஹாமில்டனில் வீடு புகுந்து கொள்ளை: அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

ஹாமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய Airport Road பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குற்றவாளிகள் சட்டவிரோதமாக புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டின் உரிமையாளர், உடனடியாக போலீசாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளிகள் இடத்தை விட்டு தப்பியோடியுள்ளனர்.சம்பவத்திற்குப் பிறகு, அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர்.இதன் பின்னர் Ajax பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஆண்ட்ரே வைட் (Andre White) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts