Tim Hortons காபியில் கரப்பான் பூச்சி? மார்க்கம் பெண் குற்றச்சாட்டு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

மார்கத்தில் வசிக்கும் ஒரு பெண் Tim Hortons நிறுவனத்தின் ஐஸ் காஃபியில் கரப்பான் பூச்சி (cockroach) கிடந்ததாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்கு உணவகத்திடமிருந்து எதிர்பார்த்த முறையில் பதில் கிடைக்கவில்லை எனவும், சட்ட நடவடிக்கை எடுப்பதை பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 10ம் திகதி Scarborough பகுதியில் உள்ள Golden Mile Tim Hortons கிளையில் (4 Lebovic Ave) இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. கடையின் பணியாளர்கள் அளித்த பதில் அசமந்தப் போக்கானது எனவும் இதனால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உத்தேசித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Related Posts