நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் நிலைத்தட்டு சந்திப்பில் அதிக தீவிரமான நிலைமைகள் காணப்படுவதால், ஆஸ்திரேலிய தட்டின் கிழக்கு பகுதி உலகின் மிக அதிக நில அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நியூசிலாந்தில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் 1931ஆம் ஆண்டில் ஏற்பட்டது. ஹாக்ஸ் பே பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக மதிப்பீடு செய்யப்பட்டு, 256 உயிரிழப்புகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. (P)

Related Posts