தமிழகத்தில் நடப்பது அனைத்துமே போலி என்கவுண்டர்- சீமான்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கான தொடர்பு தெளிவுபடுத்தப்படவில்லை.அதேபோன்று அமைச்சர் நேருவின் சகோதரர் ராம ஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்ட சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம் ஆகியோரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல் துறை முனைப்பு காட்டுகிறது. தமிழகத்திலேயே அதிக வழக்குகளை சந்தித்த அரசியல் கட்சி நாங்கள்தான். இதனால் எங்கள் கட்சியின் செயல்பாடு வேகம் குறையாது. கோலி குண்டு விளையாடியது கோர்ட்டு வாசலில்தான். நீதிபதி மன்றங்களும், ஜெயில்களும் கட்டப்பட்டதே எங்களுக்காகத்தான் என்று நினைக்கிறேன் என சீமான் கூறினார்.

Related Posts