கனடாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ரொறன்ரோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு கொண்டவர்களால், கனடாவில் இந்து கோயில்கள் மீதான மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதேபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் கனடாவின் மோசமான மத சகிப்பின்மையை எடுத்துக்காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கனடாவில், லிபரல் கட்சி, காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது, இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்களிக்கத் தகுதியுடைய சுமார் 600,000 இந்துக்கள் கனடாவில் உள்ளனர். மெட்ரோ வான்கூவர், கால்கரி மற்றும் எட்மண்டன் போன்ற நகரங்களில் இந்து வாக்குகளே தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன. இதனாலேயே, இந்துக்களைச் சமாதானப்படுத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் கார்னி ரொறன்ரோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் ராமநவமி வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.