யோர்க் பிராந்திய காவல்துறையின் புலனாய்வாளர்கள், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆன்மீக ஆசிரியர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். 44 வயதான பரவீன் ராணிஜன், Toronto நகரைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறார். இவர் ஆன்மீக வகுப்புகள் மற்றும் மத கல்வி அமர்வுகளை Pickering பகுதியில் நடத்தி வந்ததாக தெரிகிறது. காவல்துறையின் தகவலின்படி, 2021 ஜனவரி முதல் 2024 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ஆன்மீக வகுப்புகளில் பங்கேற்ற ஒருவர், குறித்த ஆசானால் ஆறு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவங்கள் Pickering மற்றும் Markham நகரங்களில் நிகழ்ந்துள்ளன. மேலும், 2024 டிசம்பரில், இரண்டாவது நபரொருவரும் ராணிஜனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவரது மீது மொத்தமாக ஏழு பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாலியல் தொந்தரவு, செக்சுவல் அசால்ட், மற்றும் பர்சனின் டிரஸ்ட் மீறி நடந்த செயற்பாடுகள் அடங்கும்.