இலங்கை யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலக தமிழ்பேரவையும் (GTF) கனேடிய தமிழ் காங்கிரசும் (CTC) ஈழ தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் இலங்கை யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையிலிருந்து தமிழர்கள் தப்பி வந்துள்ளனர். 

2009ல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்த காலம் முதல் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடுரமான குற்றங்களிற்காக நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன். 

இலங்கையில் நடந்த அநீதிக்கு நீதி கிடைக்கும் வரையில் அமைதி என்பது சாத்தியமில்லை. 

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை ஆதாரங்களை சேகரித்து வருகிறது. 

இலங்கையின் யுத்த குற்றவாளிகள் மீது விசாரணை நடத்துவதற்கான சாத்தியகூறுகளை முன்வைக்கவுள்ளது. 

பிரம்டன் நகரமும் கனடாவின் அனைத்து நிர்வாகங்களும் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. 

எனினும் உலகதமிழர் பேரவை (GTF) கனேடிய தமிழ் காங்கிரசின் (CTC) ஆலோசனை குழுவின் உறுப்பினர் ஒருவருடன் இணைந்து தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் இலங்கை யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளனர். 

இது நீதி பொறுப்புக்கூறல் என்ற இலக்கில் ஒரு அடி பின்னோக்கிய நடவடிக்கையாகும். தமிழ் மக்களிற்கு எதிரான மிகமோசமான குற்றங்களிற்காக கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள யுத்த குற்றவாளியும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவுடன் கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் படமெடுத்துக்கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. 

 உலகதமிழர் பேரவை கனேடிய தமிழ் காங்கிரசின் இந்த நடவடிக்கைகளை நான் கடுமையான கண்டிக்கின்றேன், கனேடிய தமிழ் அமைப்புகளும் கனடா அரசாங்கமும் தமிழ் மக்களின் நீதி பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதில் உரிய தார்மீகநிலைப்பாட்டை தெரிவு செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என பட்ரிக் பிரவுன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கை இணைப்பு: https://twitter.com/patrickbrownont/status/1740382569307230597

Related Posts