சர்ப்ரைஸ்! புது படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளாரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேப்டன் விஜயகாந்த் மரணம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. இவர் அரசியலுக்கு வந்தபின் சினிமாவில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக இவர் ஹீரோவாக நடித்த படம் என்றால் அது விருதகிரி தான். இதன்பின் தனது மகன் ஹீரோவாக நடித்த சகாப்தம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இவர் இறப்பதற்கு முன் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.இது செம சர்ப்ரைஸ் என ஒரு பக்கம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதற்க்குள் இது உண்மையில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க விஜயகாந்திடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. 

ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது என கூறப்படுகிறது. அவரால் பேச முடியாது, மற்றொரு நபரின் உதவியின்றி இவரால் உட்கார கூட முடியாது என்பது இறுதியாக நடந்த தேமுதிக கூட்டத்தின் வீடியோவில் பார்த்திருப்பீர்கள். அப்படி இருக்க அவரால் எப்படி நடிக்க முடியும்? அவர் மட்டும் சினிமாவில் ஆக்டிவாக இருந்திருந்தால் இன்று ரஜினியோ விஜயோ நம்பர் ஒன் ஸ்டாராக இருந்திருப்பார்களா என தெரியவில்லை. அதேபோல அரசியலில் ஆக்டிவாக இருந்திருந்தால் ஸ்டாலின் முதல்வராக இருந்திருப்பாரா என தெரியவில்லை. என்ன செய்வது உடல் ஒத்துழைக்க வில்லையே?

Related Posts