நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்று, அந்த பணத்தில் நடிகர் சங்க கடனை தீர்த்த பெருமைக்கு உரியவர் கேப்டன் விஜயகாந்த். இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் என தமிழ் திரையுலக நட்சத்திரகள் அனைவரும் புறப்பட்டு நட்சத்திர விழாவிற்கு சென்றனர். அந்த வீடியோக்களை இப்போதும் இணையத்தில் காணலாம். ஆனால், அஜித் மட்டும் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நடிகர் சங்கத்திற்கு குறிப்பிட்ட தொகை ஒன்றை அஜித் கொடுள்ளார். நட்சத்திர விழாவிற்கு அஜித் வராததால் கடும் கோபத்தில் இருந்த விஜயகாந்த், அஜித்திடம். ஒன்னோட காசு எனக்கு வேண்டாம் நாங்க நினைத்ததை விட அதிகமாக கிடைத்துவிட்டது என கூறியுள்ளார்.
அஜித் எவ்வளவோ காரணங்கள் சொல்லியும் விஜயகாந்த் மனம் இறங்க வில்லை. பின்னர் விஜயகாந்திடம் அஜித், தனது முதுகில் இருக்கும் காயங்களை காட்டி, முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷன், அதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வலியின் காரணமாக தான் நட்சத்திர விழாவிற்கு வரமுடியவில்லை என கூறியுள்ளார். உடனே கேப்டன் விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுதுவிட்டாராம். இதன்பின் அஜித் கொடுத்த அந்த பணத்தை மனசார ஏற்றுக்கொண்டாராம் கேப்டன். கேப்டன் கோபத்தில் ஒருவரை திட்டிவிட்டால் கூட அடுத்த நிமிடமே, தான் திட்டிய நபரிடம் சென்று மன்னிப்பு கேட்டு விடுவாராம். சற்று கடுமையாக திட்டிவிட்டால், இவர் அழுக ஆரம்பித்து விடுவாராம்.