நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆயில் டேங்கர் லாரி!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஆயில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயில் டேங்கர் என்பதால் தீ மளமளவென பரவி, மேம்பாலம் முழுவதும் பரவியது. இதனால் அந்த லாரி நிலை தடுமாறி, சாலை டிவைடரில் மோதி கவிழ்ந்தது.

இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மேலும், அப்பகுதியில் சென்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இருப்பினும் முதல் கட்ட விசாரணையில், இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் லூதியானா போலீஸார் பார்வையிட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts