விஜய் பட நடிகைக்கு விமானத்தில் ஏற்பட்ட சம்பவம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ரஜினி உடன் பேட்ட, விஜய் உடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் அடுத்து விக்ரமின் தங்கலான் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து முடித்திருக்கிறார். தமிழில் வந்த உடனே உச்ச நட்சத்திரங்கள் கூட நடிக்க ஆரம்பித்துவிட்டார். தங்கலான் படத்திற்காக அவர் சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார்.இந்நிலையில் இன்று மாளவிகா மோகனன் பிரபல விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணித்து இருக்கிறார். அப்போது அதன் ஊழியர்கள் மாளவிகாவிடம் rude ஆக பேசி இருக்கின்றனர். மோசமான அனுபவம் பற்றி நடிகை மாளவிகா தற்போது ட்விட்டரில் புகார் அளித்து இருக்கிறார். அவரது பதிவு இதோ, Very rude and bad service @IndiGo6E Jaipur. Bad staff behaviour. இவரது பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Posts