சட்டை போடாமல், ரோட்டில் ஓடிவந்து திருணம் செய்துகொண்ட நடிகரின் மருமகன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. இவர் தங்கல், தூம் 3 உள்ளிட்டபல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத் இணையின் மகளான இரா கானுக்கும் உடற்பயிற்சியாளர் நுபுர் ஷிக்காரேவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது,. மணமகனான நுபுர் திருமண ஆடைகளை அணியாமல் உடற்பயிற்சிக்கான ஆடையுடன் வீட்டிருந்து 8 கிலோமீட்டர் ஓடி வந்து திருமண மண்டபத்தை அடைந்திருக்கிறார். மேலும், அதே ஆடையுடனே திருமண ஒப்பந்தமும் செய்திருக்கிறார். அமீர் கானின் மகளுக்கு மிக எளிமையான முறையில் வித்தியாசமாக நடந்த இத்திருமணம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

Related Posts