நடிகரும் இயக்குநருமான சசிகுமார் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார், கேப்டன் விஜயகாந்த் எப்படி அனைவருக்கும் ஒரே உணவு அளித்தாரோ அதேபோன்று நான் கம்பெனி ஆரம்பித்த போதும் சொன்னேன். இதையெல்லாம் கேப்டன் விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொண்டேன். கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருக்கலாம் , பெரிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்திருக்க முடியும். எம்ஜிஆர் இறந்த போது எவ்வளவு கூட்டம் இருந்ததோ அதே கூட்டம் விஜயகாந்த் இறந்த போது இருந்தது, இன்னும் பொதுமக்கள் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க கட்டடத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டும். அவர் பெயர் வைப்பதில் தவறில்லை. இவ்வாறு நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
இப்போது வரை யார் பெயர் வைக்கலாம் என்ற விவாதம் எழுந்து கொண்டு இருக்கிறது. விஷால் கலைஞர் பெயர் வைக்க வேண்டும் என ஒரு மேடையில் கூறி இருப்பார் . மற்ற சங்க உறுப்பினர்களை கேட்காமல் விஷாலே இப்படி கூறி இருந்தது சமூக வலைதளத்தில் கூட வைரலானது. பலரும் நடிகர் சங்கத்திற்காக உழைத்த விஜயகாந்தை விடுத்து எப்படி கலைஞர் ஐயா பெயர் வைப்பீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.