விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த போகாமல் வீட்டில் அழுத வடிவேலு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்த விஜயகாந்த், மக்கள் மனதிலும் நிலையான இடத்தை பிடித்துவிட்டு இவ்வுலக வாழ்வை விட்டு போனார். விஜய், சூர்யா போல் பல நடிகர்களின் வாழ்க்கையில் விஜயகாந்த் பெரிய பாதையை அமைத்து தந்துள்ளார். விஜயகாந்த் இல்லை என்றால் விஜய் இன்று இப்படி ஒரு மாஸ் ஹீரோவாக வந்திருக்க முடியாது. இணையத்தில் பல நடிகர்கள் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி பற்றி முன்வந்து கூறு நெகிழ்கிறார்கள். அதேபோல் வடிவேலுவின் சினிமா பயணத்திற்கு விஜயகாந்த் ஒரு முக்கிய பங்காக இருந்துள்ளார். ஆனால் அவர் இறப்பிற்கு வடிவேலு ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பது ரசிகர்களின் பெரிய வருத்தமாக உள்ளது.

 வடிவேலுவின் நண்பரும், நிர்வாகியுமான மாலின் என்பவர் ஒரு பேட்டியில், விஜயகாந்த் மறைவால் வடிவேலு அழுதது தனக்குத் தெரியும் என்றும் நேரில் சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதாலேயே அவர் செல்லவில்லை என பேசியுள்ளார். உண்மையில் இந்த கூற்றும் சரிதான். ஏனெனில் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய்க்கே மக்களில் ஒருவர் செருப்பை தூக்கிவீசினார்கள். அப்படி என்றால் வடிவேலு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால் கண்டிப்பாக ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்.

Related Posts