அந்த நடிகையுடன் நிச்சம் செய்து கொள்ள உள்ள விஜய்தேவரகொண்டா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா. ஆரம்பத்தில் கன்னடம் மொழியில் மட்டும் நடித்து வந்தவர் இப்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் சாதித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் ஆன அனிமல் படத்தின் மூலமாக ராஷ்மிகா ஹிந்தியிலும் ஒரு முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். ராஷ்மிகா தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதை அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

இருப்பினும் அவர்கள் ஜோடியாக வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று வரும் ஸ்டில்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் வரும் அடுத்த மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார்கள் என தகவல் பரவி இருக்கிறது. இவர்கள் தங்களுக்கு உள்ள காதலை வெளிப்படுத்தும் விதத்தை இவர்கள் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.

Related Posts