கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர். இப்போது இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் போதுமான வரவேற்பை பெறுவதில்லை. வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தில் நடிக்க அஞ்சலிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இப்போது கேம்சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இவருக்கு மீண்டும் திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இடையில் பிரபல நடிகருடன் காதலில் இருந்தவர் இப்போது அந்த உறவில் இருந்து வெளியே வந்துவிட்டார்.
உடல் எடையை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அஞ்சலி தனது திருமண வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் முதலில் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது, பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் செய்து குழந்தையும் பெற செய்து விடுகிறார்கள் இந்த யூடியூபர்கள் என விளையாட்டாக சொல்லி சிரித்தார் அஞ்சலி. என்னதான் தற்போது இவருக்கு போதுமான வரவேற்பு இல்லாவிடினும் கூட தமிழ் சினிமாவில் என்றும் ஒரு ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.