பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளர் மாயாவா? எப்படி?

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பிக்பாஸ் 7 சீசன் எந்த சீஸனும் இல்லாத அளவிற்கு பெரிய வெற்றியை எட்டியுள்ளது. காரணம் உள்ளே உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பயங்கர சண்டை பிரியர்களாக உள்ளனர். மக்களுக்கு தான் எப்போதுமே நெகட்டிவ் விஷயங்கள் ரொம்ப பிடிக்குமே! அதனாலோ என்னமோ பிக்பாஸ் 7 -வது சீஸனும் படுவைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மிகவும் tough போட்டியாளராக இருந்து வந்தவர் தான் விசித்ரா.

95 நாட்களுக்கு மேலாக கடும் போட்டிகளை விளையாடி மக்களின் மனதையும் வென்று வந்த இவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த விசித்திராவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள் அவரது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள்.இந்த நிலையில் விசித்ரா பிக்பாஸிற்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு சந்தோஷமாக இருக்கு. என்னை பலரும் யார் டைட்டில் ஜெயிப்பார் என கேட்கிறார்கள், பலரும் கூறுவது அர்ச்சனா தான்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் மாயா ஜெயித்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது, தனிப்பட்ட காரணம் இல்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் நான் கூறுகிறேன் என பேசியுள்ளார். ஆனால் வெற்றி சதவீதமோ அர்ச்சனாவுக்கு தான் அதிகமாக உள்ளது. பார்ப்போம் யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்று!

Related Posts