தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சினிமாவில் மட்டுமா? பிசினஸில் கூட முன்னணி தான். பட தயாரிப்பு, டீக்கடை, ரியல் எஸ்டேட், பருத்திப்பால் பிசினஸ், நாப்கின் பிசினஸ், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு ,விவசாயம் என இவர் இல்லாத துறையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் தனது நாப்கின் நிறுவனத்தின் வெற்றி விழாவில் நடிகை நயன் தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். இது சுயநலம் என்று தோன்றலாம்.
ஆனால் சுயநலத்துக்கு பின்னால் பொதுநலன் உள்ளது.
முன்பெல்லாம் சானிடரி நாப்கின் என பொதுவெளியில் சொல்வதற்கே தயங்கினோம். ஆனால் இப்போது தைரியமாக நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம் என கருதுகிறேன்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல; சாதனை பெண்ணுக்கும் பின்னால் கண்டிப்பாக ஆண் இருக்க வேண்டும்.
எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார். அவரை சந்தித்து முதலே ஒவ்வொரு முயற்சியிலும் அவர் எனக்கு துணையாக உள்ளார் என பேசியுள்ளார்.