நயன்தாரா சினிமா வாழ்வில் இதுவே முதல்முறை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நயன்தாரா நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். சமீபத்தில் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படத்தில் மத உணர்வைப் புண்படுத்துவதாக இருக்கிறது. இந்த மாதிரியான படங்களை வெளியிட்டு வரும் Netflix தளத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அன்னபூரணி திரைப்படத்தை Netflix OTT தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. புரட்சி ஏற்படுத்துவது போல எந்த படங்கள் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். குறிப்பாக பெண்களை மைப்படுத்தி நடிக்கும் படங்களில்! இதே நிலை தான் இப்போது அன்னபூரணி படத்திற்கும்.

Related Posts