அருவி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகை அதிதி பாலன். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.பெரும்பாலும் முதல் படத்திலே தன்னுடைய திறமையை இந்த தமிழ் சினிமாவிற்கு நிரூபித்துவிட்டார். திறமையான நடிகை ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தார் இப்போது தனுஷ் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழில் மேலும் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதி பாலன், பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன். அவருடன் பிரேக் ஆகிவிட்டது.
அதன் பின்னர் நான் பல பேருடன் உறவில் இருந்தேன். சில உறவுகளில் என்னை டார்ச்சர் செய்து உள்ளனர். நானுமே டார்ச்சர் செய்ததன் விளைவு தான் பல பிரிவுகளுக்கு காரணம் என்று அதிதி பாலன் தனது உறவுகள் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.
Font size: 15px12px
Print
Related Posts