சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை : பெற்றோருக்கு வெளியான ம

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் அந்த தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

9 மாதம் முதல் 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு குறித்த தடுப்பூசி செலுத்தப்படும்.

அத்துடன், 6 மாதம் முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான மேலதிக சின்னம்மை தடுப்பூசிகளும் எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் செலுத்தப்படு

அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு சென்று குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related Posts