ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து, அமெரிக்காவின் சியாட்டில் நகருக்கு புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் மீண்டும் டோக்கியோ விமான நிலையத்திற்கு திரும்பி உள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த போலீஸார், விமானத்தில் பயணித்த அமெரிக்க பயணி ஒருவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ”விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் திடீரென விமான பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவரை சமாதானப்படுத்த முயன்ற பெண் ஊழியர் ஒருவரை அந்த பயணி திடீரென கடித்துள்ளார். இதையடுத்து விமானத்தை மீண்டும் டோக்கியோ விமான நிலையத்திற்கே விமானி கொண்டு வந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.