அந்த நபரால் பாதி வாழ்க்கையை தொலைத்த சமந்தா!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இப்போது யாரும் தொடமுடியாத உயரத்தில் உள்ளார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் சாதிக்கமுடியும் என்பதற்கு இவரே முன் உதாரணம். கடந்த சில காலங்களுக்கு முன்னர் அவரது காதலை வெளிப்படையாக அறிவித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டார் அவர். அதற்கு பிறகு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த அவர் திடீரென மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் நாக சைதன்யா பற்றி மறைமுகமாக பதிவிட்டு இருக்கிறார். 

எனது வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில் என் பார்ட்னரின் influence இருந்திருக்கிறது. எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட நான் இத்தனை காலம் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன் என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார். விவாகரத்து ஆகி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட தனது காதலை மறக்க முடியாமல் அவ்வப்போது பொதுவெளியில் பேட்டி வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். இந்தநிலையில் சமந்தாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விஜய் தேவரகொண்டாவிற்கும் ராஷ்மிக்காவிற்கும் திருமண நிச்சயம் என கூறப்படுகிறது. எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts