மஹிந்தவும் திலங்கவும் இராஜினாமா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

அதன்படி அவர்கள் இன்று (30) காலை தமது பதவிகளை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் செயற்குழு கூட்டம் நேற்று (29) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

அக்கட்சியின் சின்னமாக நாற்காலி சின்னத்தை கொண்டு பரந்த கூட்டணியை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி அரசியலமைப்பில் திருத்தம் செய்து புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கு 03 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“இன்று ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று சபைக்கு என்னால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதாவது கதிரையின் அடையாளத்துடன், ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பரந்த அமைப்பை நாம் உருவாக்கவுள்ளோம். ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி நாங்கள் அரசியலமைப்பை திருத்த வேண்டும். அந்த அரசியலமைப்புகளை எமது கட்சி தலைமையகத்தில் திருத்தம் செய்வோம்.அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பொதுஜன ஐக்கிய பெரமுன, புதிய நிர்வாகிகள் சபையொன்றை நியமிக்கும் என நம்புகின்றோம். வெற்றிலை சின்னத்திற்கு இப்போது வழக்கு.. வழக்குத் தொடுத்துள்ள இருவரும் இராஜினாமா செய்து வெற்றிலையுடன் கூட்டணியில் இணைவார்கள் என நம்புகிறோம்…”


 

Related Posts