Font size: 15px12px
Print
யாழ்ப்பாணம் - வடமராட்சியின் சில பகுதிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்த நிலையில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஆங்காங்கே ஓட்டப்பட்டுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குஷ்பு, கலா மாஸ்டர் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு காட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
குஷ்பு பங்கேற்காத நிலையில் கலா மாஸ்டரே இசை நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts