தொட்டிலுக்கு பதில் குழந்தையை ஓவனில் வைத்த தாய்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

அமெரிக்காவில் தாய் ஒருவர் கவனக்குறைவாக குழந்தையை தொட்டிலில் வைப்பதற்கு பதிலாக ஓவனில் வைத்ததில், குழந்தை தீக்காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தின் கன்சாஸ் நகரில், தனது ஒரு மாத கைக்குழந்தை உயிரிழந்து விட்டதாக அதன் தாய் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், குழந்தையின் உடலை பரிசோதனை செய்த போது உடலில் தீக்காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். 

இது தொடர்பாக குழந்தையின் தாய் மரியா தாமஸிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை தவறுதலாக தொட்டிலுக்கு பதிலாக மைக்ரோவேவ் ஓவன் எனப்படும் அடுப்பில் வைத்ததாக கூறி மரியா தாமஸ் அதிர்ச்சியளித்தார்.

கடும் சூடு காரணமாக குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டதோடு உயிரிழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மரியா தாமஸ் மீது உயிரிழப்பு ஏற்படும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Posts