நன்றாக நடித்தால் இனி சான்ஸ் இல்லையா! பெரிய நடிகரின் கொள்கை!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற இடத்தை இன்னும் யாராலும் நிரப்ப முடியவில்லை. பலர் வருகிறார்கள், வந்த வேகத்திலே போகிறார்கள். ஆனால் காமெடியில் என்றும் முடி சூடா மன்னனாக இருப்பவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது இவர் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்த்தி, வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

அதில் அவர், வடிவேலுடன் ஒரு படத்தில் நடிக்கும் போது என்னை கூப்பிட்டு நீ நல்லா நடிக்கிற என்று சொல்லி பாராட்டினார் ஆனால் படத்தில் அந்த காட்சி இருக்காது. தன்னை விட யாராவது நன்றாக நடித்துவிட்டால் அவர்கள் தன்னுடன் இருக்க கூடாது என்ற கொள்கையை கொண்டவர் வடிவேலு. வடிவேலு தன்னுடன் இருப்பவர்களுக்கு தான் பட வாய்ப்பு கொடுப்பார். 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க கோவை சரளாவிற்கும் எனக்கும் இயக்குனர் வாய்ப்பு கொடுத்திருந்தார். ஆனால் வடிவேலு, அவுங்க எல்லாம் பார்த்த மூஞ்சிகள் அதனால் இந்த படத்துல வேண்டாம் என்று சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். வடிவேலு ஒரு பாம்பு மாதிரி. அவருடைய குணம் அப்படி தான் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Posts