சரக்கு ரயில் தடம் புரளும் அதிர்ச்சி வீடியோ!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டெல்லியில் உள்ள படேல் நகர்- தயாப்ஸ்தி பிரிவில் சரக்கு ரயில் ஒன்று இரும்பு கம்பிகள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 

ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தடம்புரண்டு சரக்கு ரயில் விபத்திற்குள்ளானது.  சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட 8 பெட்டிகளில் உள்ள பொருட்களை அகற்றவும், ரயில் பெட்டிகளை மீட்கவும் ரயில்வே துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இந்த ரயில் கவிழ்ந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts