காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் கட்டும் எகிப்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேல்-காசா இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதனால் உயிருக்கு பயந்து ஏராளமானோர் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். அதன்படி லட்சக்கணக்கானோர் எகிப்து எல்லை நகரமான ரபாவில் உள்ள அகதிகள் முகாமிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ரபா நகருக்கு அருகில் ராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருகிறது. இது காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக இந்த சுவர் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

எனினும் இதுகுறித்து எகிப்து அரசாங்கம் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜுவைத்- ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி 3.5 கிமீ தொலைவுக்குச் சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகிற செயற்கை கோள் படங்களை மேக்ஸர் டெக்னாலஜீஸ் வெளியிட்டுள்ளது.

Related Posts