நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தெலுங்கு சினிமாவில் தான் மனுஷன் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு ரசிகர்களோ தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா பக்கமும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள். அதுவும் குறிப்பாக பெண் ரசிகர்கள் தான். விஜய் தேவரகொண்டா அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகிறார். தற்போது அவர் இரண்டு மாணவிகளுக்கு கொடுத்து இருக்கும் பதில் வைரல் ஆகி வருகிறது. இரண்டு மாணவிகள் தேர்வுக்கு படிக்காமல் முத்த வீடியோ வெளியிட்டு, இதற்கு விஜய் தேவரகொண்டா ரிப்ளை செய்தால் தேர்வுக்கு படிக்க தொடங்குவோம் என குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அதற்கு பதில் சொன்ன விஜய் தேவரகொண்டா 90% மதிப்பெண் பெறுங்கள், நான் உங்களை நேரில் சந்திக்கிறேன் என கூறி இருக்கிறார். சமூகம் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. கண்டிப்பாக இவர்களது பெற்றோர்கள் சோசியல் மீடியாவில் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.இவர்களது பெண்கள் இப்படி நடிகர் பித்து பிடித்து சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்து கண்டிக்காமல் இருப்பது சமூகத்தின் மோசமான நிலையை தான் காட்டுகிறது.