நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார். அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அதில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இன்று கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இவர் கட்சி தொடங்கியது தான் தொடங்கினார், மக்கள் உடனே அவரை முதல்வர் ஆக்கிவிடுவார்கள் போன்று! அந்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. ஏனெனில் எல்லா நடிகரும் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டு தான் உள்ளார்கள். இவர் மட்டும் தான் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே, அரசியலில் குதித்து விட்டார்.
அதனால் தான் இவரது வரவை எதிர்நோக்கி, தமிழகத்தில் மாற்றம் வந்து விடாதா என மக்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.
அதனால் விஜய் தற்போதே அரசியல் பணிகளில் மிக தீவிரம் காட்டுவது தெரிகிறது. விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி சினிமா துறையிலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து இருப்பது பற்றி நடிகர் வைபவ்விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இந்த கேள்வியை எல்லாம் நான் GOAT ஷூட்டிங்கில் அடுத்த முறை விஜய் அண்ணாவை பார்க்கும்போது கேட்டு சொல்கிறேன், ஆனால் இதை கேட்டால் அவர் ஒரு அறை தான் விடுவாரு என வைபவ் விளையாட்டாக தெரிவித்துள்ளார்.