தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே தனது கடைசி படம் என்றும் அவர் கூறியுள்ளார்.அதன்பின் முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். தான் உச்சத்தில் இருக்கும்போதே, அரசியலில் இறங்கியதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அருண் பாண்டியன் இடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த அருண் பாண்டியன் விஜய்யுடன் நான் சண்டை போட்டு இருக்கிறேன், நிறைய பிரச்சனை இருக்கு. ஆனால், அரசியலில் அவர் இறங்கியதற்கு அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். பொதுவாக சினிமாவில் தன்னுடைய காலம் முடிந்தபின் தான் அரசியலில் இறங்குவார்கள். ஆனால், விஜய் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போதே துணிந்து இப்படியொரு முடிவு எடுத்துள்ளார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். ஆனால் இறுதிவரை தனக்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை? என்பது பற்றி இறுதிவரை கூறவில்லை.
Font size:
Print
Related Posts