கனடியத் தமிழர் பேரவையிடம் (CTC) பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் வகையில் கனடியத் தமிழர் கூட்டு' எனும் கரிசனையாளர் குழு பல்வேறு மட்ட உரையாடல்களையும், சந்திப்புக்களையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
CTCயின் தமிழ்ச் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் கடும் விமர்சனங்களையும், அதிருப்திகளையும், கண்டனங்களையும் எதிர்கொண்டுவரும் நிலையில், கனடியத் தமிழ்ச் சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் முகமாக, பல்வேறு மட்ட சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்வாங்கும் வகையில் இந்த உரையாடல்களும் சந்திப்புகளும் அமைந்து வருகின்றன.
குறிப்பாக, உலகத் தமிழர் பேரவை (GTF) முன்னெடுப்பிலும், கனடியத் தமிழர் பேரவையின் அனுசரணையுடனும், முன்னெடுக்கப்படும் இமாலயப் பிரகடனம் எனும் செயற்திட்டம் தொடர்பிலும் இந்த உரையாடல்கள் கவனம் செலுத்தி வருகின்றன. கனடியத் தமிழர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் CTC, கனடியத் தமிழர்களது ஆணையைப் பெறாமல், இமாலயப் பிரகடனத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவது குறித்த கடுமையான கண்டனங்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், இந்த உரையாடல்கள் நிகழ்கின்றன.
இந்த விடயங்களை குறித்து கனடாவில் இயங்கும் தமிழ் ஊடகங்கள், ஊடகர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
February 23, 2024,
வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணி
Scarborough Event Centre,
5637 Finch Ave E Unit 1,
Scarborough, ON MIB 5K9
உங்கள் வருகையை உறுதிப்படுத்த தொடர்பு கொள்க: (+1) 647-560-7013
: canadiantamilcollective@gmail.com