2025க்குள் யாழின் 03 தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய அரசு 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கியுள்ள இத்திட்டத்தின் கீழ் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய தீவுகளுக்கு மார்ச் 2025க்குள் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் “USOLAR” நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். (P)


Related Posts