வித்தியாசமாக நடந்த அஜித்-ஷாலினி கல்யாணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் அஜித்-ஷாலினி என்ற காதல் ஜோடியை யாராலும் மறக்க முடியாது. காரணம் இவர்களது காதல் வாழ்க்கை மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளது. நல்ல நடிகன் என்பதை தாண்டி நல்ல தந்தை, நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்பதில் அஜித் மிகவும் கவனமாக உள்ளார். அமர்க்களம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இயக்குனர் சரணிடம் அஜித், சீக்கிரம் படம் எடுத்து முடித்துவிடுங்கள், இல்லையென்றால் இந்த ஹீரோயினை காதலித்துவிடுவேன் என ஷாலினி முன்பே இதனை கூறியுள்ளார். அவ்வாறே, படம் முடிவதற்குள் நிஜமாக ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஆனால் அவரோ தனது அப்பாவிடம் பேசுங்கள் என கூறியிருக்கிறார்.

எந்த ஒரு நட்சத்திரத்தின் திருமணத்திலும் நடக்காத ஒரு விஷயம் அஜித்-ஷாலினி கல்யாணத்தில் நடந்ததாம். நட்சத்திரங்களில் திருமணத்திற்கு பிரபலங்கள் வருவது வழக்கம் ஆனால் வருபவர்கள் பெரும்பாலும் சாப்பிட மாட்டார்கள். அவர்களது கார் ஓட்டுநர்களுக்கு சாப்பிட ஆசையாக இருந்தாலும் சாப்பிட முடியாதாம். அஜித் திருமணத்தில் விஜபிக்களின் கார் வந்து நிற்கும் இடத்தில் அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுநருக்கு கையோடு கல்யாணத்தில் போடப்படும் சாப்பாட்டை பார்சல் கட்டி கொடுத்துவிடுவார்களாம். இதனால் அந்த ஓட்டுநர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்களாம். இதே விஷயம் அடுத்து சூர்யா-ஜோதிகா திருமணத்தில் நடந்ததாம்.

Related Posts