யோகிபாபு உடன் இணையும் பிரபலத்தின் மகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யோகி பாபு காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் படங்கள் நடித்து வருகிறார். ஆனால் நான் எப்போதும் காமெடியன் தான், ஹீரோ எல்லாம் இல்லை என மீடியாவிடம் அடிக்கடி கூறி வருகிறார் யோகி பாபு. அதேபோல் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சிலது இருப்பினும் அவை பெரிதாக மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. அதுவே காமெடியாக நடித்த எல்லா படங்களும் ஹிட் தான். இந்நிலையில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு. இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்கிறாராம். அவர் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts